* அதிக கொழுப்பு உணவை சாப்பிட்ட பின்னர் வெள்ளரியின் இருமுனைகளை நீக்கிவிட்டு சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.
* கடுகை அரைத்து தேய்த்து வெள்ளிப் பாத்திரங்களை கழுவினால் போதும். கறைகள் சுத்தமாக நீங்கி, பாத்திரங்கள் பளபளக்கும்.
* இட்லி அல்லது தோசைமாவு அரைத்த அரை மணி நேரத்தில் சுட வேண்டுமா? டோன்ட் வொர்ரி. கை பொறுக்கும் சூட்டில் உள்ள தண்ணீரில் பாத்திரத்துடன் மாவை வைத்து விட்டால் போதும். மாவு புளித்துப் பொங்கும்.
*கதவு, ஜன்னல் திறக்கும் போது, மூடும் போதும் கிரீச்சிடுகிறதா! பென்சில் கூர்மையினால் தேய்த்து விட்டால் சப்தம் கேட்காது.
* பிளாஸ்டிக் டப்பாக் களில் கறை படிந்திருந்தால் சிறிது உப்பை வெந்நீரில் கலந்து ஊற்றி குலுக்கினால் கறைகள் நீங்கும்.
*விதை இல்லாத கத்தரிக்காயை மெல்லிய துண்டுகளாக சீவி தோசைக் கல்லில் எண்ணெய் விட்டு இரு புறமும் மொறு மொறுப்பாக வறுத்து, அதில் உப்பு, மிளகாய்த் தூள் தூவினால் கத்தரிக்காய் சிப்ஸ் ரெடி.
* முதல் நாள் வாங்கிய பூசணிக்காய் துண்டுகளை மறுநாள் உபயோகிக்க வேண்டுமானால் ஒரு வெள்ளைத் துணியில் சுற்றி வைத்தால் போதும். நீர்த்துப் போகாமல் இருக்கும்.
* பூரி, சப்பாத்தி செய்யும் போது மாவில் சிறிது கல்கண்டு தூள் சேர்க்கலாம். சுவை கூடுதலாகும். எளிதில் ஜீரணமாகும்.
* வேகவைத்த மரவள்ளிக் கிழங்கின் உள் தோலை துண்டுகளாக்கி, உப்பு, மிளகாய்த் தூள் தடவி, வெயிலில் காய வைத்து எண்ணெயில் பொரித்தால், அப்பளம் போல சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.
* கிச்சனில் கொசுத் தொல்லையா, டோன்ட் வொர்ரி. மாம்பூவை சேகரித்து நெருப்பில் போட்டு புகைய விட்டால் அதன் வாசனை சகிக்க முடியாமல் கொசு ஓடியே போகும்.
* மிக்ஸியில் வெண்ணெய் எடுக்க தயிர் ஏடையும், தண்ணீரையும் கலந்து ஜாரில் ஊற்றி மிக்ஸியை ஓட விடவும். 2 முறை ஓட்டி விட்டு மிக்ஸியை நிறுத்தவும். 1 மணி நேரம் கழித்து மீண்டும் ஓடவிட்டால் வெண்ணெய் திரண்டு ஜாரின் மேற்பரப்பில் சேரும்.
* வத்தக்குழம்பு, புளிக் காய்ச்சல் கொதித்த பிறகு நெல்லிக்காய் அளவு வெல்லம் போட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
*பாத்திரத்தின் கழுத்து வரை ஏதாவது ஒரு எண்ணெயை பூசி அடுப்பில் வைத்தால் கரி பிடிக்காது. கரி பிடித்தாலும் சிறிது சீயக்காய் போட்டு தேய்த்து கழுவினால் போதும். பாத்திரம் பளிச்சிடும்.
* வடாம் மாவில் எலுமிச்சைச் சாறு சேர்த்தால் வடாம் அதிக நாட்கள் கெடாமல் இருக்கும். வடாம் மாவு கிளறும் முன்பு ஆழாக்கு மாவில் தண்ணீர் சேர்த்து ஊற்றினால் வடாம் பளிச்சென வெள்ளையாக இருக்கும். பெரியதாகவும் பொரியும்.
– அ. யாழினி பர்வதம்.
குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
0