* புது அரிசி வடிக்கும் போது குழைந்து விட்டதா… கவலை வேண்டாம், அரை மூடி எலுமிச்சம் சாறு விட்டு இறக்குங்கள் பொல பொலவென இருக்கும்.
* ஆம்லெட் தயார் செய்ய முட்டையோடு கொஞ்சம் பால் கலந்து அடிச்சிப் போடுங்கள். அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.
* கத்தரிக்காய் கூட்டோ, பொரியலோ செய்தாலும் கொஞ்சம் கடலை மாவைத் தூவி 5 நிமிடம் கழித்து இறக்குங்கள். மணம் கம, கமவென இருக்கும்.
*கோதுமை திரிக்கும் போது ஒரு கைப்பிடி கொண்டைக் கடலையையும் சேர்த்துப் போட்டு திரிச்சா சப்பாத்தியோ, பூரியோ எதுவானாலும் சுவை, வாசனை, சத்து அதிகமாக இருக்கும்.
*வெஜிடபிள் சாலட் செய்யும்போது நீர் அதிகமாகி விட்டால் நான்கைந்து பிரட் துண்டுகளை வறுத்து அதில் போடுங்கள். சரியாகி விடும். சுவையும் நன்றாக இருக்கும்.
*ஒரு கப் மாவிற்கு ஒரு ஸ்பூன் வீதம் ரவை கலந்து பிசைந்து பூரி சுட்டால் பூரி உப்பலாக வரும்.
* மோர்க்குழம்பு செய்து இறக்கும் முன் சிறிது தேங்காய் எண்ணெய் விட்டு இறக்கினால் அதன் சுவையே தனி.
* மீன் சமைக்கும்போது கொஞ்சம் எலுமிச்சைச்சாறு விட்டால் ருசியாக இருப்பதுடன் மீனும் கறுக்காது.
* கடலையை வறுப்பது போல் கூழ் வற்றலையும் எண்ணெய் இல்லாமல் மணலில் வறுத்து எடுக்கலாம். பெரிதாகவே பொரியும்.
* வெண்டைக்காய் கறி செய்யும் போது சிறிது தயிர் ஊற்றி வதக்கினால் சுவையாக இருப்பதுடன் வழவழப்பும் இருக்காது.
*பால் இளஞ்சூடாக இருக்கும்போது உறை ஊற்றினால் தான் தயிர் நன்றாக தோயும். சுவையும் இருக்கும்.
* பீன்ஸ் பருப்புகளை வேகவைக்கும் போது முதலியே உப்பு போடக் கூடாது. உப்புப் போட்டால் வேக வெகுநேரம் எடுத்துக் கொள்ளும்.
* குளிர் சாதன பெட்டியில் வைக்கும் பொருட்கள் பிளாஸ்டிக் பைகளில் வைப்பதைவிட அலுமினியத்தாளில் வைத்தால் அதிக நாட்கள் கெடாது.
* அவியல், பச்சடி இவைகளில் தயிர் சேர்ப்பதால் அவை விரைவில் புளித்து விடும். இதைத் தடுக்க உபயோகிக்கும் போது உப்பு சேர்த்தால் சீக்கிரம் புளிக்காது.
* தோசை வார்க்கும் போது ஒட்டிக் கொண்டால் வெங்காயத்தை இரண்டாக வெட்டி தோசைக் கல்லில் தேய்த்தால் தோசைக்கல்லில் ஒட்டாது.
* தோசை, இட்லிக்கு ஆட்டிய மாவுகள் புளிக்காமல் இருக்க அதில் இரண்டொரு வெற்றிலைகளை போட்டு வைக்கலாம்.
* உப்பு ஜாடியில் சிறிது அரிசியை போட்டுவைத்தால் கட்டி பிடிக்காது.
* பச்சை மிளகாயின் காம்புகளை கிள்ளி வைத்தால் அவை வாடாமல் இருக்கும்.
* சப்பாத்தி மாவில் கொஞ்சம் டால்டா கலந்து பிசைந்தால் சப்பாத்தி மென்மையாகவும், ருசியாகவும் இருக்கும்.
– விமலா சடையப்பன்.
குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்
0