Tuesday, March 5, 2024
Home » குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்

by Porselvi

* உளுந்து ½ கப், அரிசி – ¼ கப், சிறிது வெந்தயம் இவற்றை ஊற வைத்து நைசாக அரைத்து 4 கப் கேழ்வரகு மாவுடன் கலந்து மறுநாள் காலை தோசை வார்க்கவும். சத்தான, சுவையான தோசை தயார்.
* காய்கறி சாலட் செய்யும் போது ஒரு கைப்பிடி பாசிப்பருப்பை ½ மணி நேரம் ஊறவைத்துச் சேர்த்தால், சத்துக்கும் சத்து, சுவைக்கும் சுவை.
* மோர்க்குழம்பு செய்ய தேவையானவற்றை வறுத்துவிட்டு தேங்காய்க்குப் பதிலாக பச்சையாகவே சிறிது கசகசாவைப் போட்டு அரைத்து மோர்க்குழம்புச் செய்து பாருங்கள். சுவையாக இருக்கும். தேங்காய் போடாததால் கொழுப்புக்குறையும். கசகசாப் போடுவதால் வயிற்றுக்குக் குளுமை.
* வெந்தயத்தைக் கறுப்பாக வறுத்துத் தூள் செய்து காபிப் பொடியில் கலந்து குடித்தால் சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது.
* துவரம்பருப்பு துவையல் செய்யும் போது சிறிது கொள்ளையும் வறுத்துச் சேர்த்து அரைத்தால் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும். உடம்பிற்கும் நல்லது.
* காரணமின்றி வயிறு வலித்தால் (திடீரென) 2 ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு தண்ணீர் குடித்தால் வலிப் பறந்து விடும்.
* இரண்டு மிளகு, ½ டீஸ்பூன் தனியா தூள் செய்து தேநீர் கொதித்து வரும் போது தூவி இறக்கி வடிகட்டி, சர்க்கரை கலந்து குடிக்க உடம்புக்கு நல்ல ஊட்டச் சத்தாக அமையும். களைப்பும் நீங்கும்.
* இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்துக்கு பதிலாக சோயா, மொச்சையைப் பயன்படுத்தி அரைத்து இட்லி செய்தால் அதிக சத்தான இட்லி தயார்.
* மாத விலக்கின் போது இரத்தப் போக்கு அதிகமானால் சாதம் வடித்த கஞ்சியில் 1 டம்ளர் மோர் விட்டு பருகினால் இரத்தப் போக்குக் கட்டுப்படும்.
* சுண்டைக் குழம்பு உடலுக்கு நல்லது. அதிக இரும்புச் சத்துக் கொண்டது. சுண்டைக்காய் ஆஸ்துமாவைப் போக்கும். பச்சைச் சுண்டைக்காயை கூட்டு, காய்ந்தச் சுண்டைக்காய் காரக் குழம்பு என்று பல விதமாய் சுண்டைக்காயை உணவில் சேர்க்கலாமே! சுண்டைக்காய் தானே என்று எண்ண வேண்டாம். அது சத்துள்ள உணவுப் பொருள்.
– என். குப்பம்மாள், கிருஷ்ணகிரி.

You may also like

Leave a Comment

3 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi