*தயிர் சாதம் கிளறும் போது ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்துக் கிளறினால் தயிர் சாதம் சுவையாகவும், நல்ல வாசனையுடனும் இருக்கும்.
*போளி தட்டும் போது வாழை இலையில் பின் பக்கமாக தட்டினால் இலை சுருங்காமல் போளி நன்றாக வரும்.
*வியர்வை நாற்றம் இருந்தால் குளிக்கும் நீரில் படிகாரத்தை கலந்து குளித்தால் நாற்றம் மறைந்து போகும்.
*ஜன்னலின் வெளிப் புறத்தில் கற்பூரவல்லி, துளசி போன்ற மூலிகைச் செடிகளை வளர்க்க வீட்டில் நச்சு பூச்சிகள், உயிரினங்கள் குறையும்.
*கட்லெட் செய்ய ரொட்டித் தூள் இல்லையெனில் அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.
*சுடுநீரில் வெற்றிலையை கொதிக்க வைத்து அணுதினமும் பருகி வர உடலில் நோய் தொற்றுக்கள் அண்டாது.
*அடைக்கு ஊறவைக்கும் போது பயத்தம் பருப்பு, ஜவ்வரிசியை ஊறவைத்து அரைத்தால் அடை மொறு, மொறுவென சுவையாக இருக்கும்.
*வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து பாட்டிலில் வைத்துக் கொள்ளவும். தோசை மாவில் இரண்டு ஸ்பூன் கலந்து வார்த்தால் நன்றாக இருக்கும்.
*இட்லிக்கு தேங்காய் சட்னி அரைக்கும் போது சிறிதளவு புதினா இலையை சேர்த்து அரைத்தால் மணமும், சுவையும் தூக்கலாக இருக்கும்.
*இட்லிப் பொடியுடன் வெங்காயத்தை நறுக்கிப் போட்டு மிக்ஸியில் ஒரு சுற்று சுற்ற விட்டால் வெங்காய சட்னி தயார்.
*வெயில் காலம் என்பதால் எந்தவிதமான குளிர்பானம் செய்தாலும் அதில் ஒரு துண்டு இஞ்சியை கலந்து கொண்டால் சளி பிடிக்காது.
*வாழைக்காய் நறுக்கும் போது கரையாகும், இதனை தடுக்க சிறிது எண்ணெய் பூசிக்கொண்டால் கரை ஏற்படாது.
*வேலைக்கு செல்லும் பெண்களுக்கு காலையில் நேரம் கிடைப்பதில்லை, இதனால் கிழங்கு போன்றவற்றை முதல் நாள் இரவே வேகவைத்து கொள்ளலாம்.
*முள்ளங்கி சமைக்கும் போது லேசாக வதக்கி சமைத்தால், எளிதில் சளி பிடிக்காது.
– விமலா சடையப்பன்
குட்டி குட்டி வீட்டு குறிப்புகள்
0