திருப்பூர்: வானில் திடீரென தோன்றிய பிரகாசமான ஒளியால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் திருப்பூர் காங்கேயம் ரோடு, கோம்பை தோட்டம், ஜம்ஜம் நகர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் வானில் திடீரென தோன்றிய 2 ஒளி பிரகாசம் கிட்டத்தட்ட 1 மணி நேரமாக நீடித்து வானில் வட்டமடித்து கொண்டிருந்தது.
அங்கும், இங்கும் ஓடிய ஒளியை பொதுமக்கள் ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்தனர். திருப்பூரில் வானில் தோன்றிய இரண்டு ஒளிகள் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவை ஏலியன்களா? அல்லது இதற்கு வேறு ஏதாவது கிரக வாசிகளா என்பது குறித்து பொதுமக்கள் விவாதித்து வருகிறார்கள்.