ஸ்கோடா நிறுவனம், ஸ்லாவியா மேட்டி எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. கார்பன் ஸ்டீல் கிரே மேட்டி வண்ணத்துடன் கூடிய இந்த காரின் துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.15.52 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேட்டி எடிஷன் 1.0 லிட்டர் டிஎஸ்ஐ எம்டி எடிஷன் விலை இது. இதுபோல் டிஎஸ்ஐ ஏடி சுமார் ரூ.16.2 லட்சம், டிஎஸ்ஐ எம்டி சுமார் ரூ.1.72 லட்சம், 1.5 லிட்டர் டிஎஸ்ஐ டிஎஸ்ஜி சுமார் ரூ.19.12 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மூன்று வேரியண்ட்களிலும் 1.0 லிட்டர் டர்டோ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.
இது அதிகபட்சமாக 113 எச்பி பவரையும், 178 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். டிஎஸ்ஐ டிஎஸ்ஜியில் 1.5 லிட்டர் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 148 எச்பி பவரையும், 250 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 8 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, சிங்கிள் பேனல் எலக்ட்ரிக் ரூப், குரூஸ் கன்ட்ரோல், 6 ஏர் பேக்குகள், ரியர் பார்க்கிங் கேமரா, ஹில் அசிஸ்ட் உட்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன. மாருதி சுசூகி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஹோண்டா சிட்டி, போக்ஸ்வேகன்விர்டஸ் ஆகியவற்றுக்குப் போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.