ஸ்கோடா நிறுவனம், ஆக்டாவியா ஆர்எஸ் கார் இந்தியச் சந்தையில் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என உறுதி அளித்துள்ளது. இந்தக் கார் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பாரத் மொபிலிடி குளோபல் எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. 4ம் தலைமுறைக்கான இந்த ஆக்டாவியா ஆர்எஸ் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது.
அது அதிகபட்சமாக 265 எச்பி பவரை வெளிப்படுத்தும். இந்தக் கார் முழுவதுமாக இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும் என்பதால், விலை அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஷோரூம் விலை சுமார் ரூ.50 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.