குஜராத் அணிக்கு எதிரான ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் மும்பை அணி அபாரமாக ஆடி 228 ரன்கள் குவித்தது. குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான், 4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் விட்டுத் தந்தார். அதில், 2 சிக்சர்கள் அடக்கம். இத்துடன் சேர்த்து, நடப்பு ஐபிஎல் தொடரில், ரஷித் கான் வாரித் தந்த சிக்சர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்தது.
இது, நடப்புத் தொடரில் மட்டும் அல்லாது, ஐபிஎல் வரலாற்றில் ஒரு பந்து வீச்சாளர் அளித்த அதிகபட்ச சிக்சர்களாகும். இதற்கு முன், 2022ல் முகமது சிராஜ், 31 சிக்சர்கள் அளித்திருந்ததே அதிகபட்சமாக இருந்து வந்தது. அந்த மோசமான சாதனையை தற்போது, ரஷித் கான் தகர்த்து முதலிடத்துக்கு உயர்ந்துள்ளார்.