திருவண்ணாமலை: செங்கம் அருகே ஆற்றில் மூழ்கிய 2 சிறுவர்களில் ஒருவர் உடல் மீட்கப்பட்டுள்ளது. நேற்றிரவு முதல் தனது இரு மகன்கள் காணாமல்போனதாக கோவிந்தராஜ் என்பவர் புகார் தெரிவித்திருந்தார். கோவிந்தராஜ் புகார் அளித்திருந்த நிலையில் அவரது மகன்கள் அகிலேசன் (4), கதிரேசன் (5) ஆற்றில் மூழ்கியது தெரியவந்தது. ஆற்றில் மிதந்த ஒருவர் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு சிறுவனின் உடலை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.