கிருஷ்ணகிரி: நா.த.க. முன்னாள் நிர்வாகி சிவராமன் உயிரிழப்பு பற்றி தவறான செய்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிவராமன் பற்றியும் அவரது தந்தை பற்றியும் தவறான செய்தி பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். குடும்பப் பிரச்சனை காரணமாக சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை முடிந்து ஜூலை 9-ஆம் தேதி வீடு திரும்பினார். சிவராமன் கைது நடவடிக்கைக்கு 2 நாட்களுக்கு முன் எலி பேஸ்ட் உட்கொண்டதாக ஒப்புக்கொண்டார். சிவராமன் எலி மருந்து உட்கொண்டதை மருத்துவர்கள், மெடிக்கல் குறிப்பில் கூறியுள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.