கிருஷ்ணகிரி :மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் முன்னாள் நிர்வாகி சிவராமன், மேலும் 12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்ததாக புகார் எழுந்துள்ளது. சிவராமன் குறித்து பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் குற்றம் சாட்டப்படுகிறது. என்.சி.சி. பிரிவே இல்லாத தனியார் பள்ளியில் சிவராமன் போலியாக என்.சி.சி. முகாம் நடத்தியது அம்பலமாகி உள்ளது. பள்ளி ஆடிட்டோரியத்தில் மாணவிகள் தங்க வைக்கப்பட்ட நிலையில் அவர்களை தனியாக அழைத்து அத்துமீறியதாக புகார் கூறப்படுகிறது.