சென்னை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட சிவராமன் மரணம் தற்கொலைதான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவராமன் மரணத்தில் எனக்கு சந்தேகம் இல்லை. சிவராமன் மரணத்தில் சந்தேகம் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை கூறி வந்த நிலையில் சீமான் விளக்கம் அளித்துள்ளார். பர்கூரில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிவராமன் கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டதை அடுத்து நாம் தமிழர் கட்சியில் இருந்து சிவராமன் நீக்கப்பட்டார்.