பேட்மின்டன் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் களம் இறங்கிய சோலைமலை சிவராஜன் ஒற்றையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் களமிறங்கினார். கலப்பு இரட்டையர் பிரிவில் அரையிறுதி வரை முன்னேறி நூலிழையில் வெண்கலம் வெல்லும் வாய்ப்பை இழந்தார்.
பதக்கம் வெல்லாவிட்டாலும் சிவராஜன் தனது அதிரடி, தாக்குதல் ஆட்டத்தால் ரசிகர்களின் இதயங்களில் சிகரமாக உயர்ந்து நிற்கிறார். அதிலும் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஹாங்காங் வீரர் மன் கய் சூவுக்கு எதிராக அவர் அடித்த ‘பல்டி ஹிட்’ கால்பந்து விளையாட்டுகளில் மட்டுமே பார்க்க முடியும். அந்த அதிரடி வீடியோ வைரலாகி வருகிறது.