Tuesday, June 24, 2025
Home ஆன்மிகம் சிவராஜ யோகம்

சிவராஜ யோகம்

by Porselvi

ஆத்மநாதன் என்பதற்குரிய ஒளி பொருந்திய ஒரு கிரகம் சூரியன் மட்டுமே. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒளியை பிரதிபலிக்கின்றன. ஆனால், ஒளியை உற்பத்தி செய்து, உலகின் இயக்கத்தையும் உயிர்களின் இயக்கத்தையும் மற்ற நவகிரகங்களின் இயக்கத்தையும் செயல்களையும் செய்விக்கக் கூடிய ஆற்றலை சூரியனிலிருந்து மட்டுமே பெறுப்படுகிறது. என்பதே மெய். அப்படிப்பட்ட சூரியனை அடிப்படையாகக் கொண்டு அனைத்தையும் வழங்கக்கூடியதே சிறந்த அமைப்பாகும். உலகின் அண்டச்சராசரங்கள் அனைத்தும் இயக்கத்தை சூரியனிலிருந்து பெறுவது என்பது சிறப்பானதாகும். உலகில் மனிதனுக்கு தேவையானதை இயற்கையிலிருந்து பெறுகிறான். இயற்கை சூரியனிலிருந்து பெற்றுக் கொண்டுதான் நமக்கு அளிக்கிறது என்பதே ஒரு சுழற்சிமுறைதான். சூரியன் என்ற கோள். காலம் என்ற காலத்தை தன்னகத்தே கொண்டுள்ளது என்பது நிச்சயம்.

சிவராஜ யோகத்தின் கிரக அமைப்பு: சூரியன் மற்றும் வியாழன் ஒன்றோடு ஒன்று ஒரே ராசிக் கட்டத்தில் இணைந்திருப்பதும்; சூரியன் மற்றும் வியாழன் ஒன்றை ஒன்றையொன்று சம சப்தமமாக பார்வை செய்து; அதில் ஏதேனும் ஒரு கிரகம் ஆட்சிப் பெற்றிருப்பது ஆகியவை சிவராஜ யோகத்தின் அமைப்பாகும். பொதுவாகவே சூரியனும் வியாழனும் நட்புக்கிரமாக இருப்பதால் இக்கிரகங்களின் இணைவு ராஜயோகத்தினை கொடுக்கும் என்பது நிச்சயம். சூரியனையும் வியாழனையும் அசுப கிரகங்கள் பார்வை இல்லாமல் இருப்பது சிறப்பாக சிவராஜ யோகத்தை கொடுக்கும். செவ்வாய், சனி, ராகு மற்றும் கேது பார்வைகள் இணைவுகள் இல்லாமல் இருப்பது சிறப்பு. இதில் சூரியன், வியாழன் நீசம் பெறாமல் இருக்க வேண்டும். கேந்திரம் மற்றும் திரிகோணங்களில் சூரியன் – வியாழன் இணைவானது சிறப்பானதாக இருக்கும். மறைவிடங்களில் மூலம் சிவராஜயோகம் இருப்பது குறைவான பலன்களைத் தரும்.

சூரியனும் வியாழனும் ராஜ கிரகங்கள் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சூரியனை ராஜா என்றும்; வியாழனை மந்திரி என்றும் அழைப்பர். சூரியன் வியாழனின் ஆலோசனையோடு அரசியல் மற்றும் நிர்வாகங்களைச் செய்வார். அரசருக்காக மந்திரி எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே இருப்பதும் சிறந்த ஆலோசனைகளை முன்கூட்டியே சொல்வதும் வியாழனின் காரகமான அறிவைப் பற்றி சொல்வதாகும்.

லக்னத்தில் சிவராஜ யோகம்

* மேஷ லக்னத்திற்கு லக்னத்தில் சூரியன் – வியாழன் இணைவதும்; ஒன்பதாம் பாவகத்தில் சூரியன் – வியாழன் இணைவதும்; ஐந்தாம் பாவகத்தில் சூரியன் – வியாழன் இணைவதும் சிறப்பான யோக அமைப்பாகும். ஏனெனில் பாக்யாதிபதியும் (9ம்), புர்வபுண்ணியாதிபதியும் (5ம்) இணைந்திருப்பது சிறப்பான அமைப்பாகும்.
* ரிஷப லக்னத்திற்கு வியாழன் சுமாரான பலன்களை கொடுத்தாலும், பதினொராம் பாவாதிபதியாக இருப்பதால்; பதினொராம் பாவகத்தில் (11ம்) சூரியன் – வியாழன் இணைவது சிறப்பான அமைப்பாகும்.
* மிதுன லக்னத்திற்கு மீனத்தில் அல்லது தனுசில் சூரியன் – வியாழன் இணைவது சிறப்பான அமைப்பாகும்.
* கடக லக்னத்திற்கு லக்னத்தில் சூரியன் – வியாழன் இணைவது சிறப்பான அமைப்பாக உள்ளது. கடகத்தில் வியாழன் பாக்யாதிபதி (9ம்) உச்சம் பெறுவது சிறப்பாகும்.
* சிம்ம லக்னத்திற்கு லக்னத்திலும்; ஐந்தாம் (5ம்) பாவகமாக தனுசிலும் சூரியன் – வியாழன் இணைவது சிறப்பான அமைப்பாகும்.
* கன்னி லக்னத்திற்கு நான்காம் (4ம்) பாவகத்தில் சூரியன் – வியாழன் தனுசில் இருப்பது சிறப்பான அமைப்பாகும்.
* துலாம் லக்னத்திற்கு வியாழன் நற்பலன் குறைவாக கொடுப்பார் என்றாயினும், பதினொராம் பாவகத்தில் (11ம்) சூரியனும் – வியாழனும் இணைவது சிறப்பான அமைப்பாகும். லக்னத்தில் சூரியன் நீசம் பெறுவார். ஆகவே, லக்னத்தில் அமர்வது மிகுந்த கெடு பலன்களை கொடுக்கும்.
* விருச்சிக லக்னத்திற்கு கடகத்தில் ஒன்பதாம் (9ம்) பாவகத்திலும் பத்தாம் (10ம்) பாவகத்தில் சூரியன் – வியாழன் இருப்பதும் சிறப்பான அமைப்பாகும்.
* தனுசு லக்னத்திற்கு (1ம்) பாவகத்தில் சூரியன் – வியாழன் இருப்பதும் சிறப்பாகும்.
* மகரம் லக்னத்திற்கு சூரியன் – வியாழன் மறைவான பாவகங்களில் இருப்பதே நல்ல அமைப்பாகும்.
* கும்ப லக்னத்திற்கு சூரியன் – வியாழன் ஏழாம் பாவகமான (7ம்) சிம்மத்திலோ அல்லது தனுசிலோ இருப்பது சிறப்பான அமைப்பாகும்.
* மீன லக்னத்திற்கு சூரியன் – வியாழன் பத்தாம் பாவகமான (10ம்) தனுசிலோ அல்லது மிதுனத்திலோ இருப்பது சிறப்பான அமைப்பாக உள்ளது.

சிவராஜ யோகத்தின் பலன்கள்

* தந்தை என்பது சூரியனை குறிக்கும். வியாழன் என்பது குழந்தையை குறிக்கும் கிரகமாக ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. தந்தை – மகன் ஒற்றுமையை குறிக்கும். இவர்களில் யாருக்கு இந்த யோகம் உள்ளதோ அவர்கள் மற்றவர்களைவிட உயர்ந்த மதிப்பையும் புகழையும் உடையவர் களாக இருப்பார்கள்.
* சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெற்றவர்களாக இருப்பர். பலரது தொடர்புகளைப் பெற்றிருப்பர்.
* இவர்களுக்கு சிவ வழிபாடு சிறப்பானதாக இருக்கும். இவர்களே தேடிச்சென்று வழிபடுவர் அல்லது இவர்களைத் தேடியே சிவனடியார்கள் வருவர்.
* நிர்வாகத்திறனிலும் சிறப்புற்று விளங்குவர். நிர்வாகத்திறன் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும்.
* அரசியல்வாதிகளுக்கும் மற்றவர்களுக்கும் சிறந்த ஆலோசகர்களாக இருப்பர். இவர்களின் சிந்தனைகள் அரசியல்வாதிகளுக்கு சிறந்த உதவியாக இருக்கும்.
* ஆன்மிகத்தில் அதிக நாட்டம் இருக்கும். திருமணம் தாமதமாக நடக்கும்.
* வீட்டில் சிவன் வழிபாடு செய்யும் பாக்கியத்தை இவர் பெற்றிருப்பார். இன்னும் சிலர் சிவனுக்காக ஒரு ஸ்தலத்தையே கட்டும் யோகம் உடையவர்களாக இருப்பர்.
* IAS மற்றும் IPS போன்றவை படித்து அதிகாரம் கொண்ட பெரிய பதவிகளை அலங்கரிக்கும் பாக்கியம் உடையவர்களாக இருப்பர்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi