விருதுநகர்: சிவகாசி அருகே மாட்டுத் தொழுவத்தில் பதுக்கி வைத்திருந்த பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். வெம்பக்கோட்டையைச் சேர்ந்த பட்டாசு விற்பனையாளர் குருவராஜ், மாட்டுத் தொழுவத்தில் பட்டாசுகளை பதுக்கி வைத்துள்ளார். மாட்டுத் தொழுவத்தில் வெல்டிங் செய்து கொண்டிருந்தபோது பட்டாசு வெடித்து சிதறி குருவராஜ், கார்த்திக் காயமடைந்தனர். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.