விருதுநகர்: சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு ஆலையில் வெடி விபத்தைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். பட்டாசு ஆலையில் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்துச் சிதறுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வெடி விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகாசி அருகே சின்ன காமன்பட்டியில் தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து
0