சிவகங்கை: சிவகங்கை அருகே காவல் நிலைய சார்பு ஆய்வாளரை வெட்டிய ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் அருகே போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று காலை காவல் ஆய்வாளர் சார்பு, எஸ்.ஐ குகன் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஆவரங்காட்டு பகுதியை சேர்ந்த பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய அகிலன் என்ற குற்றவாளி காரில் வந்துள்ளார்.
அவர் கைகளில் வைத்திருந்த ஆவணங்களை வைத்து குகன் என்ற சார்பு ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். இந்த நிலையில், காளையார் கோவிலை சேர்ந்த காவல் ஆய்வாளர் ஆடிவேல் தனது துப்பாக்கியால் குற்றவாளி அகிலனை காலுக்கு கீழ் சுட்டு பிடித்தார். சுடப்பட்ட குற்றவாளி பெரும் காயங்களுடன் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனு.மதிக்கப்பட்டு தற்போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். சிவகங்கையில் கடந்த 1 மாதத்தில் 2 குற்றவாளிகள் சுட்டு பிடிக்கப்பட்ட சம்பவம் குற்றவாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.