காஞ்சிபுரம்: சிவகங்கை வாலிபர் கொலையில், தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கை போதாது, பின்புலத்தில் இருந்து அழுத்தம் கொடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் வலியுறுத்தியுள்ளார்.காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் இல்ல நிகழ்ச்சி காஞ்சிபுரத்தில் நடந்தது. அதில், காஞ்சிபுரம் மாவட்ட தேர்தல் பொறுப்பாளரும் அதிமுக முன்னாள் அமைச்சருமான அதிமுக இலக்கிய அணி மாநில செயலாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார்.பின்னர், செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சிவகங்கை மாவட்டம், மடப்புரம் அஜித்குமார் தாக்குதலுக்கு தலைமைச் செயலகத்திலிருந்து ஐஏஎஸ் அதிகாரியின் அழுத்தம் காரணமாக தான் காவல்துறை தனிப்படை மூலம் 100 சவரன் கொள்ளை அடித்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு, 9 சவரன் நகைக்காக, அழுத்தம் காரணமாக காவல்நிலையத்தில் விசாரிக்காமல் தனியிடத்திற்குள் வைத்து விசாரணை என பெயரில் கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கிறார்கள்.இதற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் யார் அந்த அழுத்தம் கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை போதாது. மேலும், இந்த வழக்கில் அழுத்தம் கொடுத்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை வாலிபர் கொலை வழக்கில் அழுத்தம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை தேவை: வைகைச்செல்வன் வலியுறுத்தல்
0