சிவகங்கை: சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி தாலுகா பள்ளிகளுக்கு செப். 11-ல் விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப். 11-ல் நடக்க உள்ள இமானுவேல் சேகரன் 67-வது நினைவு தினத்தை ஒட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் செப்.21-ல் 4 தாலுகாவில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.