சென்னை : “புதிய சிற்றுந்து திட்டம் -2024″ குறித்து சிஐடியூ தொழிற்சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.”புதிய சிற்றுந்து திட்டம் -2024” குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னையில் நடைபெற்று வருகிறது. சிற்றுந்துகளுக்கு 25 கி.மீ வரை பயண தூரத்தை அதிகரிப்பதற்கான திட்டம் குறித்தும் கருத்துக் கேட்பு நடைபெறுகிறது. சென்னையில் மினி பேருந்துகளை இயக்குவது மாநகர பேருந்து போக்குவரத்து கழகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் நகர் பகுதியில் மினி பஸ் இயக்கலாம் என முடிவு செய்துள்ளதால் அரசு போக்குவரத்துக் கழகம் நஷ்டம் அடையும் என்றும் சிஐடியூ தெரிவித்துள்ளது.
புதிய சிற்றுந்து திட்டமத்திற்கு சிஐடியூ தொழிற்சங்கம் எதிர்ப்பு
141
previous post