திருவனந்தபுரம் :மலையாள திரையுலகில் நடிகைகள் அளித்த பாலியல் புகார்களில் இதுவரை இயக்குனர் ரஞ்சித், நடிகர் சித்திக் உள்ளிட்ட 18 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வினு முனீர், மேற்கு வங்க நடிகை மற்றும் கடைசியாக சோனியா மல்ஹர் அளித்த புகார் அடிப்படையில் போலீஸ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மலையாள திரையுலகில் பாலியல் அத்துமீறல்கள் அதிக அளவில் நடப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.