
புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில், துணை முதல்வராக இருந்த சிசோடியாவை கடந்த பிப்ரவரி 26 ம் தேதி சிபிஐ கைது செய்தது. அதன் பிறகு சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில், அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறையின் காவல் கடந்த மாதம் 22ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டிருந்தார். அவருடைய 14 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம் கே நாக்பால் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது விசாரணை அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி சிசோடியாவின் நீதிமன்ற காவலை வரும் 17 ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.