கொழும்பு, நேற்று நடந்த ஆசிய கோப்பை பைனலில் பல்வேறு சாதனைகள் உடைத்து நொறுக்கப்பட்டு, புதிய சாதனைகள் படைக்கப்பட்டன. இலங்கை அணியை 50 ரன்னில் சுருட்டி வீச முக்கிய காரணமாக இருந்த முகமது சிராஜ், சர்வதேச போட்டிகளில் ஒரே ஓவரில் 4 விக்கெட் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை வசப்படுத்தினார். இதற்கு முன் இலங்கையின் சமிந்தா வாஸ் (2003, வங்கதேசத்துக்கு எதிராக), பாகிஸ்தானின் முகமது சமி (2003, நியூசிலாந்துக்கு எதிராக), இங்கிலாந்தின் அடில் ரஷித் (2019, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக) ஆகியோர் ஒரே ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றி உள்ளனர்.