புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவில், நாடு முழுவதும் ஒரே அரசியலமைப்பு மதம் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதான்சு துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ‘‘ அரசியலமைப்பு மதம் இருக்க வேண்டும் என்று கோரியுள்ளீர்கள். தனிப்பட்ட நபர்கள் வெவ்வேறு மதங்களை பின்பற்றுவதை உங்களால் தடுக்க முடியுமா? இது போன்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது’ என்று கேள்வி எழுப்பி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.