திருவனந்தபுரம்: ரீமா கல்லிங்கல் இளம்பெண்களுக்கு போதை விருந்து நடத்தியதாக பாடகி சுசித்ரா குற்றம்சாட்டியிருந்த நிலையில் கேரள திரைத்துறையில் பாலியல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு விசாரணை குழுவிடம் ரீமா புகார் அளித்துள்ளார்.
கேரளாவை சேர்ந்த நடிகை ரீமா கல்லிங்கல், கொச்சியில் அமைந்துள்ள அவரது வீட்டில் போதை விருந்துகள் நடத்தியதாகவும், அதில் பல்வேறு பெண்களை பங்கேற்க செய்தாகவும் பாடகி சுசித்ரா குற்றம்சாட்டியிருந்தார். இந்த சம்பவங்களால் தான் நடிகை ரீமாவின் எதிர்காலமே பாதிக்கப்பட்டிருந்தது என்பது குறித்தும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை ரீமா கல்லிங்கல், பாடகி சுசித்ராவிற்க்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றசாட்டை சுசித்ரா கூறியிருப்பதாகவும், இது ஹதொடர்பாக மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுபோப உள்ளதாகவும் ரீமா கல்லிங்கல் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரீமா தொடர்பாக சுசித்ரா கூறியுள்ளது தொடர்பாக, கேரளா திரையுலக தொடர்பாக விசாரணை செய்து வரும் சிறப்பு விசாரணை குழுவினரிடம் ரீமா கல்லிங்கல் புகார் அளித்துள்ளார். தனக்கு எதிரான இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைடு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.