சிங்கப்பூர்: சிங்கப்பூரில், சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டி ஒன்றில் சீன வீராங்கனை வாங் ஸி யி, ஜப்பான் வீராங்கனை ஏ.யமகுச்சி உடன் மோதினார். இப்போட்டியில் முதல் இரு செட்களை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். வெற்றியைத் தீர்மானிக்கும் 3வது செட், வாங் வசம் வந்தது. அதனால், 21-12, 12-21, 21-17 என்ற செட் கணக்கில் வென்ற வாங், இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரை இறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகள் சென் யு ஃபெய், ஒய்.ஹான் மோதினர். முதல் செட்டை ஹான் வென்றார். 2வது செட், சென் வசம் வந்தது. 3வது செட்டை சுதாரித்து ஆடிய சென் கைப்பற்றினார். அதனால், 12-21, 21-15, 21-12 என்ற செட் கணக்கில் வென்ற சென் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.