சிங்கப்பூர்: சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் போட்டியில் நேற்று நடந்த முதல் சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அபார வெற்றி பெற்று 2ம் சுற்றுக்கு தகுதி பெற்றார். சிங்கப்பூரில் சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீனாவில் பிறந்து கனடாவுக்காக ஆடி வரும் வென் யு ஷாங் உடன் மோதினார்.
இப்போட்டியில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சிந்து, 21-14, 21-9 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் 2வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ரக்சிதா ராம்ராஜ், தென் கொரிய வீராங்கனை ஜி.இ.கிம் மோதினர். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய தென் கொரிய வீராங்கனை கிம், 21-14, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.