கோவை: சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கோவை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த ஸ்கூட் விமானத்தில் போதைப் பொருள் கடத்தி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து பயணிகளை சோதனையிட்டபோது சந்தேகதிற்கிடமாக வந்த நபரின் உடமைகளில் அதிகாரிகள் சோதனையிட்டனர். சம்பந்தப்பட்ட பயணியை சோதனையிட்டபோது சுமார் 2 கிலோ போதைப் பொருள் கடத்திவந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.