சிங்கப்பூர்: சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீரர் குன்லாவுட் விதித்சர்ன் அபார வெற்றி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். சிங்கப்பூரில் சிங்கப்பூர் பேட்மின்டன் ஓபன் போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தாய்லாந்து வீரர் குன்லாவுட் விதித்சர்ன், சீன வீரர் லு குவாங்சு உடன் மோதினார். இப்போட்டியில் துவக்கம் முதல் அதிரடியாக ஆடிய தாய்லாந்து வீரர், 21-6, 21-10 என்ற நேர் செட் கணக்கில் அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
சிங்கப்பூர் பேட்மின்டன் வித்தை காட்டிய விதித்சர்ன்; கெத்தாய் ஆனார் சாம்பியன்
0