சிவகங்கை: சிங்கம்புணரியில் ஜெஸ்ரில் பள்ளியில் காருக்குள் மூச்சுத்திணறி 2ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கமான பள்ளி வாகனத்தில் இல்லாமல் காரில் அழைத்துச்செல்லப்பட்ட 7 வயது சிறுவன் அஸ்வின், கீழே இறக்கிவிடாமல் காரின் உள்ளேயே வைத்து கதவை பூட்டிச் சென்றதால் மூச்சுத்திணறி உயிரிழந்தார். பள்ளி தாளாளரின் கணவர் சங்கர நாராயணன், அவரது மகன் மகேஷ் குமார், கார் ஓட்டுநர் ஜான் பீட்டர் கைது செய்யப்பட்டனர்.
சிங்கம்புணரியில் காருக்குள் மூச்சுத்திணறி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் 3 பேர் கைது!!
0