தேவையான பொருட்கள்:
கோக்கோ பவுடர் – 1 கப்
நாட்டுச் சர்க்கரை (அ) கருப்பட்டி – 1 கப்
நட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய்ப் பால் பவுடர் – 1 கப்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
ஒரு தட்டில் வெண்ணெய் தடவி வைக்கவும். விருப்பப்படும் அனைத்து நட்ஸ்களையும் உடைத்து வெறும் கடாயில் எண்ணெய் இல்லாமல் லேசாக வறுக்கவும். வறுத்ததும் வேறு தட்டில் எடுத்து வைக்கவும். அதே கடாயில் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும் வரை பாகு காய்ச்சவும். பதம் வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு கோக்கோ பவுடர், தேங்காய்ப் பால் பவுடர், வறுத்த நட்ஸ் அனைத்தையும் ஒவ்வொன்றாக சேர்த்து கட்டி இல்லாமல் கிளறவும். ஒரே மாதிரி கடிகார சுற்றில் கிளறவும். பிறகு வெண்ணெய் சேர்த்து மீண்டும் கிளறவும். ஆறியதும் ஃப்ரீசரில் 2 மணி நேரம் வைத்து எடுக்கவும். விருப்பப்பட்ட வடிவத்தில் வெட்டி பரிமாறவும். சுவையான சிம்பிள் சாக்லேட் தயார்.