ஆண்கள் டெக்கத்லான் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் தேஜஸ்வின் ஷங்கர் ஒட்டுமொத்தமாக 7666 புள்ளிகள் குவித்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 100 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல், 400 மீ. ஓட்டம், 110 மீ. ஹர்டுல்ஸ், வட்டு எறிதல், போல் வால்ட், ஈட்டி எறிதல், 1500 மீ. ஓட்டம் என 10 வகை போட்டிகள் அடங்கியது டெக்கத்லான். மிகக் கடினமான இந்த போட்டியில் சீனாவின் சன் கிஹாவோ (7816) தங்கம், ஜப்பானின் மருயமா யுமா (7568) வெண்கலம் வென்றனர்.