* இங்கிலாந்து அணியுடன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 2வது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 483 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இங்கிலாந்து 427 மற்றும் 251; இலங்கை 196.
* ராவல்பிண்டியில் வங்கதேச அணியுடன் நடக்கும் 2வது டெஸ்டில், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 274 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (சைம் அயூப் 58, கேப்டன் ஷான் மசூத் 57, சல்மான் ஆஹா 54, பாபர் ஆஸம் 31, ரிஸ்வான் 29). வங்கதேச பந்துவீச்சில் மெஹிதி ஹசன் மிராஸ் 5, டஸ்கின் அகமது 3, நஹித் ராணா, ஷாகிப் அல் ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய வங்கதேசம், 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 10 ரன் எடுத்துள்ளது.
* டெல்லி பிரிமியர் லீக் தொடரில் நார்த் டெல்லி ஸ்டிரைக்கர்ஸ் அணியின் மனன் பரத்வாஜ் வீசிய ஒரு ஓவரில் சவுத் டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணி வீரர் பிரியன்ஷ் ஆர்யா 6 பந்திலும் 6 சிக்சர் விளாசி சாதனை படைத்தார்.