* லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் அணியின் துணை பயிற்சியாளராக இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் எஸ்.ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கருடன் இணைந்து அவர் பணியாற்றுவார்.
* தென் ஆப்ரிக்க அணியுடன் புளோயம்போன்டீனில் நேற்று நடந்த 2வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் 106 ரன் (93 பந்து, 12 பவுண்டரி, 3 சிக்சர்), டிராவிஸ் ஹெட் 64 ரன் (36 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்), லாபுஷேன் 124 ரன் (99 பந்து, 19 பவுண்டரி, 1 சிக்சர்), ஜோஷ் இங்லிஸ் 50 ரன் விளாசினர். ஆஸி. அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 392 ரன் குவித்தது.
* பொலிவியா அணியுடன் நடந்த உலக கோப்பை கால்பந்து தென் அமெரிக்க தகுதிச்சுற்று போட்டியில் பிரேசில் அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. இப்போட்டியில் 2 கோல் போட்டு அசத்திய நெய்மர், பிரேசில் அணிக்காக அதிக கோல் போட்ட வீரர்கள் பட்டியலில் பீலேவின் சாதனையை (77 கோல்) முறியடித்து முதலிடத்துக்கு முன்னேறினார் (79 கோல்).