* கணுக்கால் காயம் காரணமாக அவதிப்படும் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, இந்திய அணி அடுத்து விளையாட உள்ள 2 லீக் ஆட்டங்களில் விளையாட மாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா அடுத்து லக்னோவில் 29ம் தேதி இங்கிலாந்து அணியையும், மும்பையில் நவ. 2ம் தேதி இலங்கையையும் சந்திக்க உள்ளது.
* நடப்பு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி வெற்றிகளைக் குவிக்க முடியாமல் தடுமாறி வரும் நிலையில், உலக கோப்பை முடிந்ததும் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆஸம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக சர்பராஸ் அகமது, ஷாகீன் ஷா அப்ரிடி, முகமது ரிஸ்வான் ஆகியோரில் ஒருவர் புதிய கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மும்பை அணி முன்னாள் கேப்டன் அமோல் மஜும்தார் (48 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 171 போட்டிகளில் விளையாடியுள்ள மஜும்தார் 30 சதம் உள்பட 11,000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
* ஏஎப்சி சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் அல் துஹைல் அணியுடன் மோதிய அல் நசர் அணி 4-3 என்ற கோல் கணக்கில் போராடி வென்றது. அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல் போட்டு அசத்தினார்.