* 4 லட்சம் டிக்கெட்கள்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 4 லட்சம் டிக்கெட்களை 2வது கட்டமாக விற்பனை செய்ய உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்த விற்பனை இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும். டிக்கெட்களை https://tickets.cricketworldcup.com என்ற இணையத்தின் மூலம் வாங்கலாம்.
* புச்சிபாபு பைனல்
அகில இந்திய அளவிலான புச்சி பாபு 4நாட்கள் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் டெல்லி-மத்திய பிரதேச அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று கோவையில் தொடங்குகிறது.
* கிங் கோப்பை கால்பந்து
தாய்லாந்தில் நடைபெறும் கிங் கோப்பை கால்பந்து போட்டியின் முதல் அரையிறுதியில் இந்தியா-ஈராக் அணிகள் நேற்று மோதின. ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்ததால், த லா 5 பெனால்டிக் ஷூட்-அவுட் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் ஈராக் 5-4 என்ற கோல் கணக்கில் வெற்றிப் பெற்றது.
* களம் காணும் சாம்பியன்
உலக கோப்பைக்கு முன்னதாக 2019ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய இங்கிலாந்து-நியூசிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. மொத்தம் 4 ஆட்டடங்களை கொண்ட இந்தத் தொடரில் சாதிக்க நடப்பு சாம்பியனான இங்கிலாந்து திட்டமிட்டள்ளது. இந்த 2 அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் 2-2என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
* இந்தியாவுக்கு வெண்கலம்
தைவானில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டியில் நேற்று 3வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துடன் நாடு இந்திய அணி திரும்புகிறது. இந்த அணியில் தமிழகத்தின் சத்யன் ஞானசேகரன், சரத் கமல் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.