* நீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாடு கேரம் சங்கத் தேர்தல் 6 ஆண்டுகளுக்கு பிறகு ஆக.20ம் தேதி நடந்தது. அதன் மூலம் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதனையடுத்து 4 ஆண்டுகளாக நிறுத்தி வைத்திருந்த தமிழ்நாடு சங்கத்துக்கான அங்கீகாரத்தை அகில இந்திய கேரம் கூட்டமைப்பு நேற்று மீண்டும் வழங்கியுள்ளது. அதன் மூலம் இனி தமிழகத்தில் தேசிய, சர்வதேச கேரம் போட்டிகள் நடப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது.
* சென்னையில் நடக்கும் தேசிய அளவிலான எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டியின் லீக் ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. அதில் ஏ பிரிவில் இருந்து இந்திய ரயில்வே, ஹாக்கி கர்நாடகா, பி-பிரிவில் இருந்து பஞ்சாப் தேசிய வங்கி, இந்திய ராணுவம்(சிவப்பு) ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன. நடப்பு சாம்பியன் ஐஓசி, ஹாக்கி யுனிட் ஆப் தமிழ் நாடு ஆகியவை லீக் சுற்றுடன் வெளியேறின.
* ஓமனில் நடக்கும் 5வீரர்கள் ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய ஆடவர் அணி நேற்று முதல் ஆட்டத்தில் மலேசிய அணியை 7-5 என்ற கோல் கணக்கில் வீழத்தியது. அதில் இந்திய வீரர் குர்ஜோத் சிங் 5 ஃபீல்டு கோல்கள் அடித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.
* ஜார்கண்ட் மாநிலத்தில் அகில இந்திய அளவிலான இளையோர் கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. தமிழகத்தில் 183வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். இவர்கள் 50தங்கம், 45வெள்ளி, 67வெண்கலம் என மொத்தம் 162 பதக்கங்களை வென்றனர். வெற்றிப் பெற்று ஊர் திரும்பியவர்களுக்கு தமிழ் நாடு மாநில கிக்பாக்சிங் சங்க நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
* தமிழக கல்லூரிகளுக்கு இடையிலான பெரி கோப்பை செஸ் போட்டி சென்னையில் நடந்தது. இதில் மாணவிகளுக்கான பிரிவில் பங்கேற்ற எம்ஓபி வைணவக் கல்லூரி மாணவி திவ்யபாரதி முதலிடம் பிடித்தார். முதல் 5 இடங்களில் 3 இடங்களை பெற்ற எம்ஓபி கல்லூரி, பெரி கோப்பையையும் வென்றது.
* புச்சிபாபு 4 நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் சட்டீஸ்கர் அணி 70ரன் வித்தியாசத்தில் தமிழ் நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் அணியை வீழ்த்தியது.
சில்லி பாய்ன்ட்…
previous post