* வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டி20 இன்று நடைபெற உள்ளது. 2, 3வது போட்டிகள் ஜூலை 11, 13 தேதிகளில் நடக்கும். ஒருநாள் தொடர் ஜூலை 16, 19, 20 தேதிகளில் நடைபெறும். இது ஐசிசி மகளிர் உலக கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டமாக நடத்தப்படுகிறது.
* 2011க்கு பிறகு ஐசிசி உலக கோப்பையை கைப்பற்ற முடியாமல் தவித்து வரும் இந்திய கிரிக்கெட் அணி, இந்த முறை சொந்த மண்ணில் நடைபெற உள்ள ஒருநாள் உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. கேப்டன் ரோகித் ஷர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இணைந்து அந்த சாதனையை வசப்படுத்துவார்கள்… என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
* ஆக்ரோஷமான எனது பேட்டிங் பாணியை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்று மும்பை தொடக்க வீரர் பிரித்வி ஷா தெரிவித்துள்ளார்.
* இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகளிடையே லீட்ஸ் ஹெடிங்லி மைதானத்தில் நடந்து வரும் 3வது டெஸ்ட் போட்டியின் 3வது நாள் ஆட்டம் நேற்று கனமழை காரணமாக பாதிக்கப்பட்டது. தேநீர் இடைவேளை வரை ஒரு பந்துகூட வீசப்படாததால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
* ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலக கோப்பை தகுதிச்சுற்றின் பைனலில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் இந்தியாவில் நடக்க உள்ள ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடருக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.ஸ்காட்லாந்து அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்திய நெதர்லாந்து அணி, இலங்கைக்கு எதிராக எப்படி விளையாடப் போகிறது என்பதில் ரசிகர்கள் மட்டுமல்லாது, உலக கோப்பையில் களமிறங்கும் மற்ற அணிகளும் கூடுதல் கவனம் செலுத்துகின்றன. குறிப்பாக, 92 பந்தில் 123 ரன் விளாசிய இளம் வீரர் பாஸ் டி லீட் ஆட்டம் அவர் மீதான எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது.