Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சி ல் லி பா யி ன் ட்

* இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள கே.எல்.ராகுல், துருவ் ஜுரெல் இருவரும் முன்னதாகவே ஆஸ்திரேலியா சென்று ஆஸ்திரேலியா ஏ அணியுடன் நடைபெற உள்ள 2வது டெஸ்டில் (மெல்போர்ன், நவ.7-10) இந்தியா ஏ அணிக்காக விளையாட உள்ளனர்.

* டெஸ்ட் போட்டிகளில் பொறுமையாக விளையாட வேண்டும் என்ற அடிப்படையான அம்சம் இப்போது காலாவதியாகிப் போனதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. அதிரடி பேட்டிங் தான் கிரிக்கெட் என்றாகிவிட்டதால், டெஸ்ட் போட்டிக்கான திறமையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. சுழற்பந்துவீச்சை சமாளிக்க ஒரே வழி, அதை எதிர்த்து அதிக நேரம் பயிற்சி செய்வது மட்டும் தான்’ என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

* ரஞ்சி கோப்பை 4வது சுற்று லீக் ஆட்டங்கள் நாளை தொடங்குகின்றன. அசாம் - தமிழ்நாடு அணிகள் மோதும் எலைட் டி பிரிவு லீக் ஆட்டம் கவுகாத்தி பரசபாரா கிரிக்கெட் அரங்கில் நடைபெற உள்ளது. கர்நாடகா - பெங்கால் மோதும் போட்டி (சி பிரிவு) பெங்களூருவிலும், மும்பை - ஒடிஷா மோதல் சரத் பவார் கிரிக்கெட் அகடமி மைதானத்திலும் (மும்பை) நடக்க உள்ளன. அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் குஜராத் - புதுச்சேரி அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.நேரம் பயிற்சி செய்வது மட்டும் தான்’ என்று இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் கூறியுள்ளார்.

ஸ்வியாடெக் வெற்றி

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடைபெறும் டபுள்யுடிஏ பைனல்ஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா உடன் மோதிய போலந்து நட்சத்திரம் இகா ஸ்வியாடெக் 4-6, 7-5, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 33 நிமிடம் போராடி வென்றார். வெற்றி மகிழ்ச்சியில் ஸ்வியாடெக்.

நடப்பு ரஞ்சி சீசனுடன் சர்வதேச, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக இந்திய அணி முன்னாள் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் விருத்திமான் சாஹா (40 வயது) அறிவித்துள்ளார். 2010ல் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக நாக்பூரில் நடந்த டெஸ்டில் அறிமுகமான சாஹா, இதுவரை 40 டெஸ்டில் 1353 ரன் (அதிகம் 117, சராசரி 29.41, சதம் 3, அரை சதம் 6), 9 ஒருநாள் போட்டிகளில் 41 ரன் மற்றும் 138 முதல்தர போட்டிகளில் 7013 ரன் (அதிகம் 203*, சராசரி 41.74, சதம் 14, அரை சதம் 43) எடுத்துள்ளார். விக்கெட் கீப்பராக சர்வதேச போட்டிகளில் 109 கேட்ச் மற்றும் 13 ஸ்டம்பிங் செய்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, சென்னை, பஞ்சாப், ஐதராபாத், குஜராத் அணிகளுக்காக விளையாடி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக திரிபுரா அணியின் வீரர்/ஆலோசகராக இருந்து வந்த சாஹா, 2024-25 ரஞ்சி சீசனில் பெங்கால் அணிக்காக கோப்பையை வென்று விடை பெற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.