* ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நடந்த சீனா, ஜப்பான், கொரியா ஓபன் பேட்மின்டன் போட்டிகளில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் யாரும் பங்கேற்காத நிலையில், இன்று தொடங்கும் தைபே ஓபன் பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து களமிறங்குகிறார்.
* அடுத்த மாதம் அமீரகத்தில் நடைபெற உள்ள ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பையில் பங்கேற்கும் ஸ்காட்லாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சகோதரிகள் கேப்டன் கேத்ரின் பிரிஸ், விக்கெட் கீப்பர் சாரா பிரிஸ் உட்பட 15 பேர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
* சென்னை பல்கலை. கல்லூரி மாணவிகளுக்கு இடையிலான செஸ் போட்டியில் சென்னை எம்ஓபி வைணவக் கல்லூரி முதலிடம் பிடித்தது. மகளிர் கிறித்துவக் கல்லூரி 2வது இடமும், பி மற்றும் ஏ மண்டல கல்லூரிகள் இணைந்த அணிகள் முறையே 3, 4வது இடங்களையும் பிடித்தன.
* பாகிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில் 185 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, மழையால் பாதிக்கப்பட்ட 4ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்துள்ளது. பாகிஸ்தான் 274 & 172; வங்கதேசம் 262 & 42/0. வங்கதேசம் கை வசம் 10 விக்கெட் இருக்க, வெற்றிக்கு இன்னும் 143 ரன் தேவை என்ற நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.
* மும்பை அணிக்காக துலீப் கோப்பை முதல் சுற்று ஆட்டத்தில் பங்கேற்க இருந்த நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் காயம் காரணமாக விலகியுள்ளார். கோவையில் கடந்த வாரம் புச்சி பாபு தொடரில் விளையாடியபோது அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
* எஸ்ஏ20 தொடரின் 2025 சீசனுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 9ம் தேதி நடக்க உள்ள தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் – எம்ஐ கேப் டவுன் அணிகள் மோதுகின்றன.