* கரிபியன் பிரிமியர் லீக் தொடரில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகி இருந்த தென் ஆப்ரிக்க வீர்ர ஹென்ரிக் கிளாஸன், சொந்த காரணங்களுக்காக 2024 சீசனில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக நியூசிலாந்தின் டிம் செய்பெர்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.
* பாகிஸ்தான் – வங்கதேசம் மோதும் 2வது டெஸ்ட் ராவல்பிண்டியில் நாளை தொடங்க உள்ளது. முதல் டெஸ்டில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்ததால் பாகிஸ்தான் அணியில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அப்ரார் அகமது, ஆமிர் ஜமால், கம்ரான் குலாம் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் டெஸ்டில் விளையாடாத வேகப் பந்துவீச்சாளர் ஷாகீன் ஷா அப்ரிடியும் அணியில் இணைந்துள்ளார்.
* ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இங்கிலாந்தின் ஹாரி புரூக் 3 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தானின் முகது ரிஸ்வான் 7 இடங்கள் முன்னேறி உஸ்மான் கவாஜாவுடன் 10வது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். பாபர் ஆஸம் 6 இடங்கள் பின்தங்கி 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
* இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் மலான் (36 வயது) சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் தேசிய அணிக்காக 22 டெஸ்டில் 1074 ரன், 30 ஒருநாள் போட்டியில் 1450 ரன், 62 டி20ல் 1892 ரன் விளாசியுள்ளார்.
* மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கருக்கு சிவாஜி பார்க் வளாகத்தில் நினைவகம் அமைக்க மகாராஷ்டிர அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
* யுஎஸ் ஒப்பன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் டேனியல் எவன்ஸ் (பிரிட்டன்) – கரென் கச்சனோவ் மோதிய போட்டி 5 மணி, 35 நிமிடத்துக்கு நீடித்தது புதிய சாதனையாக பதிவாகி உள்ளது. மாரத்தான் போராட்டமாக அமைந்த இப்போட்டியில் எவன்ஸ் 6-7 (6-8), 7-6 (7-2), 7-6 (7-4), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்றார்.
* தென் ஆப்ரிக்க அணியுடன் நடந்த 3வது மற்றும் கடைசி டி20ல் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ், தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றி ஒயிட்வாஷ் செய்தது. தென் ஆப்ரிக்கா 13 ஓவரில் 108/4; வெஸ்ட் இண்டீஸ் 9.2 ஓவரில் 116/2 (டி/எல் இலக்கு). ஆட்ட நாயகன்: ரொமாரியோ, தொடர் நாயகன்: ஷாய் ஹோப்.
சில்லி பாயின்ட்…
previous post