* ஐதராபாத் கிரிக்கெட் சங்க அணிக்கு எதிரான புச்சி பாபு போட்டியில் மத்திய பிரதேசம் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் முடிவில் ஐதராபாத் விக்கெட் இழப்பின்றி 52 ரன் எடுத்துள்ளது.
* டிஎன்சிஏ தலைவர் லெவன் அணி க்கு எதிராக குஜராத் கிரிக்கெட் சங்கம் 7 விக்கெட் இழப்புக்கு 321 ரன் குவித்துள்ளது.
* சத்தீஸ்கருடன் மோதும் பரோடா அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 255 ரன் எடுத்துள்ளது.
* கொரியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ருதுபர்னா/ ஸ்வேதாபர்னா ஜோடி 18-21, 5-21 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் ஷை பெய் ஷான்/ஹுங் என்-ட்ஸு இணையிடம் தோல்வியைத் தழுவியது.
* ஆஸ்திரேலியாவில் அக்.27ல் தொடங்கும் மகளிர் பிக் பாஷ் லீக் தொடரில், அடிலெய்டு ஸ்டிரைக்கர் அணிக்காக விளையாட இந்திய நட்சத்திரம் ஸ்மிரிதி மந்தானா ஒப்பந்தமாகி உள்ளார். இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா ஆகியோரும் இத்தொடரில் விளையாட உள்ளனர்.
சில்லி பாய்ன்ட்…
previous post