* இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் சர்ரே அணிக்காக 2 போட்டியில் விளையாட இந்திய வீரர் சாய் சுதர்சன் (சென்னை) ஒப்பந்தமாகி உள்ளார்.
* ஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி இணை, டென்மார்க்கின் ஜோஸ்பர் டோஃப்ட்/ அமிலியா மாக்லண்ட் இணையுடன் நேற்று மோதியது. முதல் செட்டில் 3-1 என டென்மாரக் இணை முன்னிலையில் இருந்த போது சிக்கி ரெட்டிக்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய இணை பாதியில் வெளியேறியது.
* யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி ஆக. 26ல் தொடங்க உள்ளது. இத்தொடருக்கான மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் முன்னணி வீராங்கனைகள் ஜில் டெய்க்மன் (சுவிஸ்), லூசியா ஸ்டெபானி (இத்தாலி), அலெக்சாண்ட்ரா சாஸ்னோவிச் (பெலாரஸ்) உள்பட பலர் களமிறங்கி உள்ளனர்.