* தென் ஆப்ரிக்க அணியுடன் டி20 தொடரில் மோத உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஆந்த்ரே ரஸ்ஸல், ஜேசன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. டி20 போட்டிகள் ஆக. 24, 26, 28ல் நடைபெற உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் டி20 அணி: ரோவ்மன் பாவெல் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ் (துணை கேப்டன்), பேபியன் ஆலன், ஜான்சன் சார்லஸ், ஷாய் ஹோப், ஆலிக் அதானேஸ், ஷிம்ரோன் ஹெட்மயர், நிகோலஸ் பூரன், ரொமாரியோ ஷெப்பர்டு, அகீல் உசேன், ஒபெத் மெக்காய், குடகேஷ் மோத்தி, ஷெர்பேன் ரூதர்போர்டு, மேத்யூ போர்டு, ஷமார் ஜோசப்.
* இங்கிலாந்து – இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிரபோர்டு மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் களமிறங்கும் 11 வீரர்கள் அடங்கிய அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. காயம் காரணமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் ஓல்லி போப் தலைமை பொறுப்பேற்கிறார்.
இங்கிலாந்து: 1.டேன் லாரன்ஸ், 2.பென் டக்கெட், 3.ஓல்லி போப் (கேப்டன்), 4.ஜோ ரூட், 5.ஹாரி புரூக் (துணை கேப்டன்), 6.ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), 7.கிறிஸ் வோக்ஸ், 8.கஸ் அட்கின்சன், 9.மேத்யூ பாட்ஸ், 10.மார்க் வுட், 11.ஷோயிப் பஷிர்.
* வங்கதேசம் – பாகிஸ்தான் மோதும் முதல் டெஸ்ட் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. இப்போட்டிக்கான 11 வீரர்கள் அடங்கிய பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஆமிர் ஜமால் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார். பாகிஸ்தான்: 1.அப்துல்லா ஷபிக், 2.சைம் அயூப், 3.ஷான் மசூத் (கேப்டன்), 4.பாபர் ஆஸம், 5.சவுத் ஷகீல் (துணை கேப்டன்), 6.முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), 7.சல்மான் அலி ஆஹா, 8.ஷாகீன் ஷா அப்ரிடி, 9.நசீம் ஷா, 10.குர்ரம் ஷாஷத், 11.முகமது அலி.