* 2030 இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்க்க வேண்டும் என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலை வலியுறுத்துவதுடன் அதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்ள உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
* வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் ஆக.21ல் தொடங்குகிறது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டுமே கொண்ட பந்துவீச்சு வியூகத்தை உபயோகிக்க பாக். அணி திட்டமிட்டுள்ளது.
* நியூசிலாந்து அணி தொடக்க வீரர் ஃபின் ஆலன், ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் லீக் டி20 தொடரில் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிக்காக விளையாட 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
* ஐசிசி மகளிர் டி20 உலக கோப்பை போட்டித் தொடரை நடத்த தயாராக உள்ளதாக ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* இந்தியா ஏ – ஆஸ்திரேலியா ஏ மகளிர் அணிகள் மோதும் 3வது ஒருநாள் போட்டி, மெக்கே கிரேட் பேரியர் ரீஃப் அரங்கில் இன்று காலை 8.50க்கு தொடங்குகிறது.
* புச்சி பாபு டிராபி ரவுண்ட் அப்…
சேலம் கிரிக்கெட் அறக்கட்டளை மைதானத்தில் நடக்கும் புச்சி பாபு கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியன் ரயில்வேஸ் அணி 570 ரன் குவித்த நிலையில், குஜராத் கிரிக்கெட் சங்க அணி 227 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 343 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ரயில்வேஸ் 5 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 481 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய குஜராத் கிரிக்கெட் சங்கம் 3ம் நாள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 91 ரன் எடுத்து திணறி வருகிறது.
* நெல்லை, இந்தியா சிமென்ட்ஸ் அரங்கில் மத்திய பிரதேச அணியுடன் நடக்கும் போட்டியில், 175 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜார்க்கண்ட் 1 விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்துள்ளது. ம.பி 225 மற்றும் 238; ஜார்க்கண்ட் 289 மற்றும் 37/1.
சில்லி பாய்ன்ட்…
previous post