* ‘எடையை குறைக்கும் முயற்சியில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டு வினேஷ் மயங்கி விழுந்தபோது அவர் பைனலுக்கு முன்பாக இறந்துவிடுவாரோ என பயந்தேவிட்டோம்’ என்று பயிற்சியாளர் வோலர் அகோஸ் தெரிவித்ததாக தகவல் கசிந்துள்ளது.
* இந்திய அணி கேப்டன் ரோகித் ஷர்மா தனது 0264 பதிவெண் கொண்ட நீல நிற லம்போர்கினி காரை மும்பை சாலையில் ஓட்டிச் சென்ற வீடியோ வைரலாகி உள்ளது. ஒருநாள் போட்டிகளில் ரோகித்தின் அதிகபட்ச ஸ்கோர் 264 ரன் என்பது குறிப்பிடத்தக்கது.
* வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த 2024 மகளிர் டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்றப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஐசிசி தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
* பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி.வி.எஸ்.லஷ்மண் 3 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் முடிவுக்கு வரும் நிலையில், மேலும் ஓராண்டுக்கு அவர் தலைவராக நீடிப்பார் என பிசிசிஐ தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
* ஆஸ்திரேலியாவின் நடக்கும் மகளிர் பிபிஎல் டி20 தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட இலங்கை கேப்டன் சமாரி அத்தப்பத்து ஒப்பந்தமாகி உள்ளார்.