* இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான கடைசி டெஸ்ட் நேற்று லண்டனில் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது.
* அமெரிக்கா ஒன்றியம், மேற்கு இந்தியத் தீவுகளில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பைக்கு முதல் அணியாக ஐரோப்பியாவில் இருந்து அயர்லாந்து தகுதிப் பெற்றுள்ளது.
* ஸ்பெயின் ஹாக்கி சங்கத்தின் 100வது ஆண்டை முன்னிட்டு தலா 4 நாடுகள் பங்கேற்கும் ஆடவர், மகளிர் சர்வதேச அழைப்பு ஹாக்கிப் போட்டி நடக்கிறது. டெர்ரஸ்சாவில் நேற்று நடந்த ஸ்பெயின்-இந்தியா மகளிர் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தையும் இந்திய மகளிர் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்தனர்.
* டெஸ்ட் அணியில் மட்டும் விளையாடி வரும் சுழல் அஷ்வின், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய ‘ரெக்கார்டு’ வைத்திருக்கிறார். எனவே அவரை உலக கோப்பை பயன்படுத்தும் வகையில் மீண்டும் ஒருநாள் அணியில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
* சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கால்பந்து அணிகள் விளையாட ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. அதனையடுத்து இந்திய ஆடவர் அணி சீனா, வங்கதேசம், மியான்மர் ஆகிய நாடுகள் உள்ள ஏ பிரிவிலும், இந்திய மகளிர் அணி தைவான், தாய்லாந்து ஆகிய அணிகள் உள்ள பி பிரிவிலும் சேர்க்கப்பட்டுள்ளன.
* ஏஐடிஏ ரேங்கிங் டென்னிஸ் போட்டி ஜூலை 31ம் தேதி முதல் ஆக.5ம் தேதி வரை சென்னை, நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் நடைபெற உள்ளது.
* மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் சென்னை எம்ஓபி வைணவக் கல்லூரி மாணவிகள் 16தங்கம், 19வெள்ளி, ஒரு வெண்கலம் வென்றுள்ளனர்.