* வங்கதேசத்தில் நடைபெறுவதாக இருந்த மகளிர் உலக கோப்பை டி20 தொடர் (அக்.3-20), ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. போட்டிக்கான உரிமத்தை வங்கதேச கிரிக்கெட் வாரியம் தக்கவைக்கும்.
* இந்திய அணி முன்னாள் தொடக்க வீரர் ராபின் உத்தப்பா, தான் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்ததாகவும், இது போன்று மன ரீதியாக பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவும் வகையில் ஆலோசனைகள் வழங்க உள்ளதாகவும் சமூக வலைத்தள பக்கத்தில் தகவல் பதிந்துள்ளார்.
* ‘டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகை கிரிக்கெட்டிலும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாக செயல்பட்டு வரும் பந்துவீச்சாளர் என்றால் அது இந்திய வேகம் ஜஸ்பிரித் பும்ரா தான். அவரது பந்துவீச்சை கணிப்பது மிகவும் சிரமம். அவர் வீசும் ஒவ்வொரு பந்திலும் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது’ என்று ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் புகழாரம் சூட்டியுள்ளார்.
* உலக கோப்பை டி20 தொடர் நடைபெற்ற அமெரிக்காவின் நியூயார்க், வெஸ்ட் இண்டீசின் டரூபா ஆடுகளங்களின் தரம் ‘அதிருப்திகரம்’ என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) முத்திரை குத்தியுள்ளது.
* 6வது டென்னிஸ் பிரிமியர் லீக் தொடர் மும்பையில் டிசம்பர் 3-8 வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதை இந்திய நட்சத்திரம் சுமித் நாகல் உறுதி செய்துள்ளார்.
* லாகூர் மற்றும் கராச்சி ஸ்டேடியங்களை புதுப்பிக்கும் பணிகள் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்பாகவே திட்டமிட்டபடி நிறைவடையும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
* அதிரடி வீரர் டேவிட் வார்னர், பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாட 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு நட்சத்திர வீரர் ஸ்டீவன் ஸ்மித் சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக 3 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.