காங்டாக்: சிக்கிமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 1,200 பேர் சிக்கி தவிக்கின்றனர். சிக்கிம் மாநிலத்தில் நேற்றுமுன்தினம் கனமழை காரணமாக மலைப்பாங்கான பகுதிகளில் பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. முக்கிய சாலைகள் துண்டிக்கப்பட்டதால் 1,200 சுற்றுலா பயணிகள் ஆங்காங்கே சிக்கி தவிக்கின்றனர். இதில் பலர் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள். கனமழை காரணமாக மாங்கன் மாவட்டத்தில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சிக்கிமில் நிலச்சரிவு: 1,200 சுற்றுலா பயணிகள் தவிப்பு
40
previous post