கங்டக்: சிக்கிமில் சாலையோர பள்ளத்தில் வாகனம் கவிழ்ந்ததில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மேற்கு வங்கத்தில் உள்ள பெடோங்கில் இருந்து சிக்கிம் மாநிலம் பாக்யோங் பகுதிக்கு சென்ற போது விபத்துக்குள்ளானது. விபத்தில் தமிழகத்தை சேர்ந்த தங்கபாண்டி என்பவர் வீரமரணம் அடைந்தார். மற்ற 3 பேரும் மத்திய பிரதேசம், மணிப்பூர், ஹரியானாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
சிக்கிமில் வாகனம் கவிழ்ந்ததில் 4 ராணுவ வீரர்கள் வீரமரணம்
previous post